ஜி-பே யூஸ் பண்றீங்களா? பாக்கெட் மணி ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?* வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு…!
இந்தியாவில் யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அல்லது ஒரு மொபைல் நம்பரை உள்ளீடு செய்தாலே ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கிற்கு நம்மால் எளிதாக பணத்தை அனுப்பி விட முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய டிஜிட்டல் கட்டமைப்பில் கொண்டு வரப்பட்ட மேம்பாடுகளே இப்படி சுலபமான பணப்பரிமாற்றத்தை நமக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு பணப் பரிமாற்றங்களை எளிமையாக்கியதோ அந்த அளவுக்கு நிதி சார்ந்த மோசடிகளையும் அதிகப்படுத்தி இருக்கிறது. எனவே கூகுள்பே, போன் பே, பேடிஎம் உள்ள யுபிஐ செயலிகளை பயன்படுத்தும்போது நாம் முன்பை விட மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதில் கூகுள் பேயில் handshake செய்வது போன்ற பிஎம் என்ற ஒரு குறியீடு இருக்கிறது. அதனை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய மொத்த பணமும் காலியாகிவிடும். இது ஒரு மோசடி வலை, இது ஒரு ஸ்கேம். எனவே இப்படி இருக்கக்கூடிய ஐகானை யாரும் க்ளிக் செய்து விடாதீர்கள் என வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு நவீன மோசடி என்றும் இந்த ஐகானை கிளிக் செய்தாலே உங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதுமாக மோசடியாளரின் கணக்குக்கு சென்றுவிடும் என்றும் அந்த ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது உண்மை கிடையாது. ஏனென்றால் google pay தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பாக்கெட் மணி என்ற ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்திருக்கிறது. வழக்கமாக பெற்றோர் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி தருவார்கள் அல்லவா அதே போன்ற ஒரு பாக்கெட் மணி முறைதான் இதுவும். உதாரணமாக பெற்றோர் தங்களுடைய பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மணியை பாக்கெட் மணியாக செட் செய்து விட வேண்டும். எனவே அவர்கள் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி பெற்றோர் எவ்வளவு தொகை ஒதுக்கினார்களோ அவ்வளவு தொகையை அந்த வங்கி கணக்கிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதான் கூகுள் பிளே அறிமுகம் செய்திருக்கக்கூடிய பாக்கெட் மணி என்ற கான்செப்ட்.
முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது அப்பா அம்மா கையில் கொஞ்சம் பணத்தை செலவிற்காக கொடுத்து விடுவார்கள். அதையேதான் கூகுள் பிளே தற்போது பாக்கெட் மணி என்ற பெயரில் ஒரு கான்செப்ட் ஆக கொண்டு வந்திருக்கிறது. இதற்கு கூகுள் பேயில் காட்டக்கூடிய இந்த பாக்கெட் மணி என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து யுபிஐ சர்க்கிள் என்ற பக்கம் வரும். அதில் உங்களுடைய அன்புக்குரியவர்கள் கூகுள் பே பதிவிறக்கம் செய்ய வையுங்கள், அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்களால் பயன்படுத்த முடியும் இதுதான் பாக்கெட் மணி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய உங்களுடைய பிள்ளைகள் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் கூகுள் பே டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்து பயன்படுத்தலாம். ஒரு மாதத்திற்கு எவ்வளவு தொகையை அவர்கள் இந்த பாக்கெட் மணி மூலம் செலவு செய்து கொள்ளலாம் என்று நீங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் இந்த பணத்தை பயன்படுத்தும் போது உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும். எனவே நீங்கள் இந்த பாக்கெட் மணி ஐகானை கிளிக் செய்ய வேண்டும், இதனை அடுத்து தோன்றும் யுபிஐ சர்க்கிள் பக்கத்தில் set up pocket money on UPI circle என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து குறிப்பிட்ட அந்த நபரின் மொபைல் எண் கேட்கப்படும். மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் அவர்களுக்கு கூகுள் பேவில் இன்வைட் செல்லும் அந்த இன்வைட்டை அவர்கள் ஏற்று கொண்டால் நீங்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பாக்கெட் மணியாக நிர்ணயம் செய்யலாம். ஒருவர் அதிகபட்சம் ஐந்து பேருக்கு பாக்கெட் மணி செட் செய்ய முடியும், பாக்கெட் மணியை நீங்கள் யாருக்கு செட் செய்கிறீர்களோ அந்த குறிப்பிட்ட போன் நம்பர் உங்களின் போனில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அதேபோல கூகுள் பிளே செயலியிலும் அந்த எண் பதிவு செய்திருக்கப்பட வேண்டும். ஆகவே, இதில் மோசடி செய்ய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

Comments are closed.