திருச்சியில் நடுரோட்டில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய பெண் தொண்டரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விஜய்…!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் இன்று(ஏப்ரல் 2) திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கினார். இதனை பார்த்த விஜய், உடனே பிரச்சார வாகனத்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கி அந்த பெண்ணிடம் நலம் விசாரித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தனது வாகனத்தை பின்தொடர்ந்து தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என ஏற்கனவே பலமுறை விஜய் கேட்டுக் கொண்டும் ஆர்வ மிகுதியால் தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்து விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அண்மையில் தஞ்சையில் விஜய் பிரச்சாரம் மேற்கண்டபோது இதேபோல விபத்தில் சிக்கிய ஒரு வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.