தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற்று மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, மண்ணடிபட்டு தொகுதியில் நமச்சிவாயம் போட்டியிட உள்ளார். முதலியார்பேட்டை தொகுதியில் ஜான்குமார், மணவவெளி தொகுதியில் ஏம்பளம் ஆர்.செல்வம், திருநள்ளாறு தொகுதியில் ராஜசேகரன், ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான், காலாபேட் தொகுதியில் கல்யாணசுந்தரம், ராஜ்பவன் தொகுதியில் ராமலிங்கம், நிரவி தொகுதியில் மீனாட்சி சுந்தரம், மாஹே தொகுதியில் தினேஷ் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள ஒரு தொகுதிக்கு பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

Comments are closed.