தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே 33 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அவர் சிறை தண்டனை பெற்றிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், ஜாமீன் நிபந்தனைப்படி எட்டயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது, விளாத்திகுளம் பகுதியில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவ நாளில் காற்றாலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தனியாக இருந்த மாணவியை மது அருந்திய நிலையில் பின்தொடர்ந்து சென்று குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மாணவியின் விரல் நகங்களில் இருந்து மீட்கப்பட்ட சதைத் துணுக்குகள், டி.என்.ஏ. பரிசோதனையில் தர்ம முனீஸ்வரனுடன் பொருந்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.