வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவகங்கள், உணவு வகைகளை குறைத்து வருகின்றன. இல்லத்தரசிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். கேஸ் தட்டுப்பாட்டை மத்தியஅரசு சரி செய்யக்கோரி திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டி பகுதியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டர்களை பாடையில் வைத்து அதற்கு மாலை அணிவித்து இறந்தவருக்கு செய்யும் சடங்குகளை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் ஒப்பாரி வைத்தனர். முசிறி வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திருச்சி வடக்கு புறநகர் மாவட்ட காங்.தலைவர் சரவணன் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் கோகிலா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.