Rock Fort Times
Online News

திருச்சியில் பெட்ரோல் பங்க்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்… கேன்களிலும் வாங்கி சென்றனர்…!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வர்த்தக சிலிண்டர்கள் கிடைப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு நிலவும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், திருச்சியில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக திருவானைக்காவல், மாம்பழச்சாலை, ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.

சிலர் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வருகை தந்து கேன் மற்றும் பாரல் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர். இதேபோன்று புறநகர் பகுதியான மணிகண்டம், நாகமங்கலம், அளுந்தூர், பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்