Rock Fort Times
Online News

திருச்சியில் நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி கொன்ற வழக்கில் 2 பெண்கள் கைது…!

திருச்சி, கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெரு பகுதியில் ஜெய்கணேஷ் மனைவி மீனாட்சி மிஸ்ரா (28) மற்றும் அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் கணேஷ் பிரபு மனைவி புவனேஸ்வரி(30) ஆகியோர் குடியிருந்து வருகிறார்கள். இந்த இரு குடும்பத்தினரிடையே கடந்த சில வருடங்களாக வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது, மண் கொட்டுவது தொடர்பாக வாய்த் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 04.03.2026- ம் தேதி காலை 6.30 மணி அளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது சம்பந்தமாக இரு தரப்பினருக்கிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது புவனேஸ்வரி, மீனாட்சி மிஸ்ரா மீது கல்லை தூக்கி எறிந்தபோது அந்த கல்லானது மீனாட்சி மிஸ்ராவின் மூன்று வயது சிறுவனின் வலது காலில் பட்டு காயம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக, மீனாட்சி மிஸ்ரா அன்று காலை 9.50 மணியளவில் தனது வீட்டின் முன்பு இருந்த இரண்டு தெருநாய்க்குட்டிகளை எடுத்து புவனேஸ்வரியின் வீட்டு இரும்பு கதவில் எறிந்ததில் இரண்டு நாய்க்குட்டிகளும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல இயக்கத்தின் துணைத்தலைவர் அஜய் பாரத் என்பவர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாட்சி மிஸ்ரா, புவனேஸ்வரி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்