போரில் ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி உயிரிழப்பு…* அமெரிக்க-இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்!
ஈரான் மீது நேற்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் நடந்த வான் தாக்குதலில், காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். காமேனியின் இறப்பை ஈரானின் அரசு ஊடகமும் உறுதி செய்தது. இந்த தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளாக ஈரானின் அரசியலை தனது சுண்டு விரரால் கட்டுப்படுத்திய காமேனியை, இன்று (மார்ச் 1) அந்நாடு பறி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டில் கடந்த 1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட நிலையில், மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உச்ச தலைவராக ருஹோல்லா கோமேனி பதவியேற்றார். அவர் மறைந்த நிலையில், 1989ம் ஆண்டு ஈரானின் உச்ச தலைவராக ஆயத்துல்லா அலி காமேனி பதவியேற்றார். அன்று முதல் கடந்த 4 தசாப்தங்களாக ஈரானின் தலைமகனாக, அமெரிக்க-இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக அவர் திகழ்ந்து வந்தார். ஈரானின் உச்ச தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விட மேலானது. வாழ்நாள் முழுவதும் இந்த பதவியில் தொடர்ந்து இருக்கலாம். ஆனால், இந்த பதவியில் அவ்வளவு எளிதில் யாராலும் அமர முடியாது. ஈரானின் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் தன்னிகரில்லா தலைவர்களே அந்த பதவியில் இதுவரை இருந்துள்ளனர். அவர்களில் ஆயதுல்லா காமேனி யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.