சென்னை, மயிலாப்பூரில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார் . மேலும் பூசாரிகளுக்கு சில சலுகைகளையும் அறிவித்தார்.
* பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும்.
* பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
*கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உம்ப வரம்பு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
*இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை ரூ.10.000 ஆக உயர்த்தப்படும். ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை மேலும் ரூ.1000 உயர்த்தப்படும்.
* பூசாரிகளின் மகன் மற்றும் மகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளின் இளநிலை, முதுநிலை படிப்பிற்கான நிதியுதவி மேலும் ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும்.
* பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு உதவித்தொகை ரூ.2.000 உயர்த்தி வழங்கப்படும்.
*பூசாரிகளின் பிள்ளைகளுக்கு தொழில் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.