திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், ஆர்.வளவனூர் கிராமம் ரெத்தினங்குடியில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சௌந்தர பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நியாய விலை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா , வட்டார சார் பதிவாளர் செல்வம், மோகன், பாஸ்கர் , கோபி, கோபால் , பாலு, ஜோதி பிரகாஷ் , சுதாகர் மற்றும் கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.