திருச்சி, சிறுகனூரில் திமுக மாநாட்டு பணிகள் தீவிரம்: அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை…!
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சி முடிய இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. ஆட்சியை தக்கவைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்துவிட்ட திமுக தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. திமுக கூட்டணியில் தேமுதிக முதல்முறையாக இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் இருக்க திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு மற்றும் மகளிர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், திருச்சியில் மார்ச் ஒன்பதாம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்த திமுக முடிவு செய்துள்ளது. சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இதற்காக சிறுகனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு தரையை சமப்படுத்தும் பணிகள் மற்றும் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி மேயர் மு .அன்பழகன், பொருளாளர் துரைராஜ், குடமுருட்டி சேகர், வழக்கறிஞர் பாஸ்கர், ராஜசேகர், அம்பிகாபதி, கிராப்பட்டி செல்வம், சீனிவாச பெருமாள், துரை கந்தசாமி, கமால் முஸ்தபா உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.