Rock Fort Times
Online News

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது திமுக…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை, 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. டி.ஆர்.பாலு தலைமையில் பேச்சுவார்த்தை குழுவை திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர் ), திருச்சி சிவா (துணைப் பொதுச்செயலாளர் .) ஆ.இராசா (துணைப் பொதுச்செயலாளர்.) ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க அமைப்புச் செயலாளர்) எ.வ. வேலு ( உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்) எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க உயர்நிலை செயல் செயல் திட்டக்குழு உறுப்பினர்) ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்