2026- 27-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று(17-02-2026) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக திருச்சி, மதுரை மற்றும் ஓசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப துறையை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்லாமல் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் உருவாக உள்ள இந்த டைடல் பூங்காக்கள் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி அதிகரித்து, உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும். மேலும், உயர்தர அலுவலக வசதிகள், டிஜிட்டல் இணைப்பு மற்றும் நவீன கட்டமைப்புகளுடன் இந்த பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த முயற்சி, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவதுடன், மாவட்டங்களுக்கு சமமான வளர்ச்சி கிடைக்கச் செய்யும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.