Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் த.வெ.க.வில் இணைந்தார்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர் . அந்தவகையில் நேற்றைய தினம் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006-2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்