வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது தான் லட்சியம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு ஜோலார்பேட்டை மண்டலவாடியில் இன்று(பிப். 14) நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த பயிற்சி மாநாட்டை
பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்த வடக்கு மண்டல பொறுப்பாளர், அமைச்சர் எ.வ.வேலு எதிலும் வல்லவர். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அவரோடு தோளோடு தோள் நின்ற ஆற்றல்மிகு மாவட்ட கழகத்தினுடைய செயலாளர், இயக்கத்தினுடைய முன்னோடிகள் நிர்வாகிகள் அனைவருக்கும், வாழ்த்துக்களுடன் தலைமை கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டுக்கு வந்திருக்கக்கூடிய நீங்கள் உங்களுடைய 40 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வைக்க தயாராக இருக்கீங்களா? வடக்கு மண்டலத்தில் எல்லா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தான் ரிசல்ட் அன்னைக்கு டிவியில் நாம பார்க்கணும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 100\100 வெற்றியை நாம பெற்றோம். அப்போது இருந்ததைவிட அதிகமான திட்டங்களை இப்போது நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். எல்லா தரப்பு கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கிறோம். அதனால பெரிய வெற்றியை வருகிற சட்டமன்ற தேர்தலில் உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். 2019 லிருந்து நாம எதிர்கொண்ட எல்லா தேர்தலையும் நமக்கு வெற்றி மேல் வெற்றி தான் அதுவும், சாதாரண வெற்றி அல்ல சதிகளை முறியடித்து சரித்திர வெற்றி, ஒவ்வொன்றும் எதிரிகளை கலங்கடிக்க கூடிய வெற்றி. இந்தியா முழுக்க எந்த ட்ரெண்ட் இருந்தாலும் தமிழ்நாட்டினுடைய நிரந்தர பிராண்ட் பிளாக் அண்ட் ரெட் தான். 2026 சட்டமன்றத் தேர்தலையும் நாமதான் வெற்றி பெற போகிறோம். 7வது முறையும் திமுக ஆட்சி தான் அமையப்போகுது. திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட் .இதை நான் ஆணவத்தில் சொல்லல.. ரொம்ப அடக்கத்தோடு. மிகுந்த பணிவோடு. அரசு செஞ்சிருக்க கூடிய சாதனைகள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் மீது சொல்கிறேன். எல்லாத்துக்கும் மேல உடன் பிறப்புக்கான உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் மீது சொல்கிறேன். 2026ல திமுகவின் வெற்றி என்பது இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வரலாற்று வெற்றியாக இருக்கணும். தமிழ்நாடு முழுக்க 100 வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம் ஒவ்வொரு பூத்களும் சராசரியாக 10 வாக்கு சாவடி குழு உறுப்பினர்களை நியமித்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் 75 ஆயிரம் பூத் இருக்கிறது. நாம் செட் பண்ணி இருக்க கூடிய டார்கெட் 350 வாக்குகள். இந்த டார்கெட்ட நாம் அச்சீவ் பண்ணால், 2 கோடி 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கிடுவோம். இந்த தேர்தலில் இரண்டு கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் நாம் வாங்கி ஆகணும். இதை நடத்திக் காட்டுவது உங்களின் பொறுப்பு. உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளை செஞ்சு தருவது என்னுடைய பொறுப்பு. இங்க இருக்க கூடியவர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதுதான் நமது லட்சியம். இவ்வாறு முதல்வர் பேசினார். கூட்டத்தில், டி ஆர் பாலு எம்பி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.