Rock Fort Times
Online News

தமிழக ஆளுநர் மற்றும் குஷ்பூ குறித்து அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!

சென்னை, கொடுங்கையூரில் கடந்த 2023ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் சில கருத்துக்களை கூறியிருந்தார். அவருடைய இந்த பேச்சு இணைய தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு வழக்கு பதிவு அவரை கைது செய்தனர். தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து திமுகவில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆளுநர், குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசிய வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்