ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தகுதிபெற்ற தேர்வர்கள் பிப்ரவரி 2 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு அந்தந்த மாநிலங்கள் மூலம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 2 தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்படும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது. டெட் 2025 தேர்வு முடிவுகளை www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.