எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹான்ஸ் தடைக்கு எதிரான வழக்கு இன்று ( 11.05.2023 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் : எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம். ஹான்ஸில் 1.8 சதவீத நிகோடின் உள்ளது. இது மக்களின் உடல் நலத்ததிற்கு கேடு என்பதால் அனுமதிக்க முடியாது. தொழில் மேற்கொள்ள அடிப்படை உரிமை இருந்தாலும், அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டது. மக்களின் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

Comments are closed, but trackbacks and pingbacks are open.