திருச்சி சரக காவல் துணைத்தலைவர் அலுவலகத்தில் பொங்கல் விழா… மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் பங்கேற்பு…!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் அலுவலகத் தில் இன்று( ஜன. 13) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வண்ணக் கோலமிட்டு, கரும்புகள் கட்டி, மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டு சாமி கும்பிடப்பட்டது.

விழாவில் காவல் துறை தலைவரும், திருச்சி சரக காவல் துணை தலைவர் பொறுப்பு வகிக்கும் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பங்கேற்று அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி காவல் துறை துணை தலைவர் அலுவலக முதுநிலை நிர்வாக அதிகாரி ரா.சி.ரவி, நிர்வாக அதிகாரி சித்ரா, சரக ஆய்வாளர் லதா, முகாம் உதவியாளர் பாலாஜி மற்றும் பிரிவு கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.