பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வருகிற 8ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகின்றனர். இதற்கான டோக்கன் விநியோகம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்காக வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளுக்கு பதிலாக பிப்ரவரி 7ம் தேதி விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.