தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெறும். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. கடந்த 2025-ம் ஆண்டு மதுரையில் மிகவும் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அதேபோல பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, வருகிற 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெறுகின்றன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்படி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் பங்கேற்று போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளிக்க உள்ளனர்.

Comments are closed.