மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடைபெறும். ஆருத்ரா தரிசனம் கண்டால், அனைத்து வகை பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம் என்பது ஐதீகம். அதன்படி, தென்கைலாயம் என போற்றுதலுக்குரிய திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதனை ஒட்டி நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா மகாதரிசன தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலைக்கோட்டை மாடவீதிகள் மற்றும் தேரோடும் வீதிகளில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், வழியெங்கிலும் திரளான பக்தர்கள் நின்றிருந்து வழிபட்டனர்.

Comments are closed.