Rock Fort Times
Online News

சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்…!

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்றும் (ஜன.2) நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை தமிழக அரசு சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் புத்தகம் ஒன்றையும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பரிசாக அளித்து வரவேற்றார். இதனைதொடர்ந்து,  தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

இதன்பிறகு, துணை ஜனாதிபதி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். மாலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பொது வரவேற்பு விழாவிலும், அதனைத்தொடர்ந்து லோக் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். நாளை( ஜன. 3) காலை அவர் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அங்கு சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து பிற்பகலில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சித்தர் தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்