Rock Fort Times
Online News

மகளிர் அணி நிர்வாகி வீட்டில் அத்துமீறியதாக புகார்: தவெக மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு…!

தமிழக வெற்றிக் கழகம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் செந்தில்நாதன். இவர், கட்சியில் உள்ள மகளிர் அணி நிர்வாகி ஒருவர் வீட்டுக்குள் அத்துமீறி சென்று உள்ளே கதவை பூட்டி உள்ளார். இதை அறிந்த பெண் நிர்வாகியின் உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணுடன் செந்தில்நாதன் இருப்பதை கண்டு, சம்பந்தப்பட்ட பெண்ணை உறவினர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வந்த நிலையில், செந்தில்நாதன் தவெக கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்