கரூரில் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 36 பேரின் குடும்பத்தினருக்கு தல ரூ.10 லட்சம் நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று(27-09-2025) தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது.கூட்டம் நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் கே. என்.நேரு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Comments are closed.