கரூரில் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமலஹாசன் இரங்கல்…!
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று(27-09-2025) தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. கூட்டம் நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.