கடந்த சில காலங்களாகவே அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அதிக சட்டத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும் இதனால் ஒருவித இறைச்சல் சூழல் நிலவுவதாகவும் பயணிகளிடம் இருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் உடல்நல குறைபாடுகளால் அவதிப்படுபவருக்கு இந்த அதிகப்படியான சத்தம் பெரும் மன உளைச்சலை தருவதாக போக்குவரத்து அமைச்சருக்கு புகார்கள் வந்தன. இந்தநிலையில் அரசு போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் செல்போன் பயன்படுத்தவும் ஸ்பீக்கர் போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்தில் பயணிகள் இயர் போன் ஹெட் போன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் பேருந்துகளில் சத்தமாக பாடல்களை ஒலிக்க விடக்கூடாது. அனைத்து பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.