இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்தும் விஜய் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது ஏன்?- அரசியல் கட்சியினர் கேள்வி…!
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று(27-09-2025) தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவரைக் காண கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. கூட்டம் நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் விஜய் இதுவரை எந்த ஒரு வருத்தமும், அனுதாபமும் தெரிவிக்காதது ஏன் என்று அரசியல் கட்சியினர் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். விஜய் முதல் மாநில மாநாட்டின் போது சாலை விபத்தில் சிக்கி 6 தொண்டர்கள் உயிரிழந்தது நினைவு கூறத்தக்கது.

Comments are closed.