Rock Fort Times
Online News

கொலையான வி.ஏ.ஓ குடும்பத்திற்கு ₹1 கோடி அரசு நிதி :எம்பி கனிமொழி வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று ( 01.05.2023 ) லூர்து பிரான்சிஸின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் உடன் இருந்தனா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்