Rock Fort Times
Online News

பிரதமர் மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய திருச்சி காவேரி மருத்துவமனைக்கு பாராட்டுச் சான்றிதழ்…* மாவட்ட கலெக்டர் வே.சரவணன் வழங்கினார்!

இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.அந்தவகையில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அந்தவகையில் பிரதமர் மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சிறப்பாக சேவை புரிந்த காவேரி மருத்துவமனைக்கு நற்சான்றிதழை மருத்துவமனையின் இயக்குனர் இரா.அன்புச்செழியனிடம், மாவட்ட கலெக்டர் சரவணன் வழங்கி பாராட்டினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்