Rock Fort Times
Online News

பெற்றோர் கண் எதிரே துயரம்: திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு…!

திருச்சி, ராம்ஜிநகர் மில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியன். இவர், முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்றார். முன்னதாக அவர்கள் குளிப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கினர். அப்போது அவரது மகன் தயாகரன்(14) சற்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அங்கு நீரோட்டம் அதிகமாக இருந்ததால் சிறுவன் நீரில் மூழ்கினான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஆற்றில் குதித்து அந்த சிறுவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்