Rock Fort Times
Online News

செப்.9-ல் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:- ஆணையம் அறிவிப்பு..!

இந்திய குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு வகித்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும், அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த பதவியிடம் காலியாக இருப்பதை கடந்த ஜூலை 22 வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்