தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அமைப்பு பொதுச்செயலாளராக கேசவவிநாயகன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநில துணைத்தலைவர்களாக சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என். சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில அமைப்பு பொதுச்செயலாளராக கேசவ விநாயகன், பொதுச்செயலாளராக பொன்.வி.பால கணபதி, ராம.சீனிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில செயலாளர்கள்:
மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், வெங்கடேசன், மலர்கொடி, சுமதி வெங்கடேசன் மீனாட்சி, சதீஷ்குமார், மீனாதேவ், வினோஜ் பி.செல்வம், அஸ்வத்தாமன், ஆனந்தபிரியா, பிரமிளா சம்பத், கதளி நரசிங்க பெருமாள், நந்தகுமார், ரகுராமன் என்ற முரளி, அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், மாநில இணை பொருளாளரக டாக்டர் எம்.சிவசுப்பிரமணியம், மாநில பிரிவு அமைப்பாளர் / இணை அமைப்பாளராக கே.டி.ராகவன், நாச்சியப்பனும், மாநில அலுவலக செயலாளராக சந்திரன், மாநில சமூக ஊடக அமைப்பாளராக பாலாஜி, மாநில தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக மகேஷ்குமார், மாநில ஊடக அமைப்பாளராக ரெங்கநாயகலுஎன்ற ஸ்ரீரங்கா, மாநில இளைஞரணி தலைவராக எஸ்ஜி சூர்யா, மாநில மகளிர் அணி தலைவராக கவிதா ஸ்ரீகாந்த், மாநில ஓபிசி அணி தலைவராக வீர திருநாவுக்கரசு, மாநில எஸ்சி அணி தலைவராக சம்பத்ராஜ், மாநில எஸ்டி அணி தலைவராக சுமதி, மாநில விவசாய அணி தலைவராக நாகராஜ், மாநில சிறுபான்மையினர் அணி தலைவராக ஜான்சன் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Comments are closed.