பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று( ஜூலை 26) தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை இன்று இரவு பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து இரவு 10-30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 27-ம் தேதி காலை விமான நிலையம் வந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடி, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோவில் பங்கேற்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமரை வரவேற்று வழி நெடுகிலும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் செல்வதற்கு நான்கு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.அதில் ஒன்றில் பிரதமர் பயணிப்பார் என்று கூறப்படுகிறது.
Comments are closed.