ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்தமாதம் ஆகும். அதிலும் ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் ஆடி செவ்வாய்க்கிழமைகள் அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஆடிமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று( ஜூலை 25) திருச்சி, வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு ரூ 500, ரூ 200, ரூ 50, 20 மற்றும் ரூ.10 என 5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
Comments are closed.