திருச்சி, நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவர் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு ராஜேஷ்வர் (வயது23 )என்ற மகன் மற்றும் இரண்டு மகள்கள். ராஜேஷ்வர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டாவது மகள் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இன்னொரு மகள் பிளஸ்- 2 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ராஜேஷ்வர் கல்லூரிக்கு செல்லாமல் ஊரில் இருந்து வந்தார். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது, தனக்கு சரியாக படிப்பு வரவில்லை என கூறியுள்ளார். மேலும் படிப்பை பாதியில் நிறுத்தியதால் ராஜேஸ்வர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார். இந்தநிலையில் பெற்றோர் வெளியே சென்று இருந்த நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சற்று நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர், மகன் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து படிப்பு சரியாக வராததால் ராஜேஸ்வர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.