துவரங்குறிச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் மேலும் சோகம்: மின் கம்பத்தில் ஏறி ஒலிபெருக்கி கட்டிய சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு…!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் ஏணி மூலம் ஏறி ஒலிபெருக்கி கட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் சிறுவன் உயிர் இழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.
Comments are closed.