Rock Fort Times
Online News

கோகுல் கொலை வழக்கில் 2 போ் விடுவிப்பு

கோவையில் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு பின்பு இரண்டு பேரை போலீசார் விடுவித்தனா். கொலை குற்றத்திற்கு உதவியாக கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த 5 போிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.ஏற்கனவே கொலையில் நேரடியாக தொடர்புடைய ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனா். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோவை மாநகர தனிப்படை போலீசார் ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.அந்த ஐந்து பேரில் இருவரை விசாரணைக்கு பின்பு விடுவித்த காவல்துறையினர் மீதமுள்ள மூன்று பேரிடம் மட்டும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்