Rock Fort Times
Online News

இந்தியாவிலேயே உயரமான 125 அடி அம்பேத்கரின் சிலை!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் தந்து வைத்தார்!

ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது. ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்