திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது., மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை( ஏப்ரல் 10) வியாழக்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்து இயங்கும் பார்கள் மற்றும் தனியார் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றம் உள்ளிட்டவைகளிலும் மதுபான விற்பனை இருக்காது. மேலும் அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.