Rock Fort Times
Online News

கைவினை தொழில் செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன்!- விண்ணப்பித்து பயன்பெற திருச்சி மாவட்ட தொழில் மையம் அழைப்பு!

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டட வேலைகள், மர வேலைகள், உலோக வேலைகள், நகை செய்தல், சிகை அலங்காரம், அழகுக் கலை, மண்பாண்டம் செய்தல், பாசிமணி வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், நெசவுத்தொழில், துணிவெளுத்தல், துணி தேய்த்தல், தையல் தொழில், தோல் பொருள்கள் தயாரித்தல், காலணி, கைவினைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட 25 வகை தொழில் செய்பவர்களுக்கு கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.50,000 ஆயிரம் மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை வங்கிக் கடன் பெறலாம்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தொழில் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., கலைஞர் கைவினை திட்டத்தில் அரசு மானியத்துடன் கடனுதவி பெற விரும்புபவர்கள், ஆதார் கார்டு ஜெராக்ஸ், ரேசன் கார்டு ஜெராக்ஸ், பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் ஆகியவை தலா இரண்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -1. செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் திருச்சி ராஜா காலனி பழைய சங்கம் ஹோட்டல் எதிரில் உள்ள. மாவட்ட தொழில் மையத்தில் சமர்பித்து கடன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, 95007 13022, -97906 79783 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்