Rock Fort Times
Online News

மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய அரசை மாற்றுவோம்- திமுக மீது விஜய் அடுத்த “அட்டாக்”…!

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். இன்று(08-03-2025) மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம் தானே?பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, பாதுகாப்பின்மையை உணரும்போது சந்தோஷம் இருக்காது தானே? அப்படி நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்வது, நீங்க, நான் என எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போது தானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியது தானே. மாற்றக்கூடியது தானே. கவலைப்படாதீங்க. 2026ல் நீங்க எல்லோரும் சேர்ந்து இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினத்தன்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதியேற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எல்லா சூழல்களிலும் உங்களுடைய மகனாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தோழனாக உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம் ” என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதல் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். முதல் மாநில மாநாட்டில் நம் முதல் எதிரி திமுக தான் என்று கடுமையாக விமர்சித்தார். புத்தக வெளியீட்டு விழா, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகளிலும் திமுகவை விமர்சித்து பேசினார். தற்போது மகளிர் தின வாழ்த்து செய்தியிலும் திமுகவை அட்டாக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்