Rock Fort Times
Online News

டி.ஐ.ஜி.தம்பதி விவாகரத்தா?- தமிழ் திரைப்பட பாடல் வரிகள் மூலம் பதிலடி கொடுத்த வருண்குமார் ஐபிஎஸ்…!

திருச்சி சரக டிஐஜி யாக பணியாற்றி வருபவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. ஐபிஎஸ் அதிகாரியான இவர் திண்டுக்கல் சரக டிஐஜி யாக பணியாற்றி வந்தார். அண்மையில் அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இந்த தம்பதியினர் குறித்து ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்தசூழலில் வருண்குமார்- வந்திதா பாண்டே தம்பதியினர் விவாகரத்து செய்யப் போவதாக அவர்களது புகை ப்படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை மறுத்த டிஐஜி வருண்குமார், தமிழ் திரைப்படத்தில் வரக்கூடிய,”நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே.. . என்ற பாடல் வரிகளை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். டிஐஜி தம்பதி விவாகரத்து குறித்த பதிவை நாம் தமிழர் கட்சியினர் தான் திட்டமிட்டு பரப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்