இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் நிகழ்கிறது. நேற்று (டிச.,31) ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,110க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,01) ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன்படி, ஒரு சவரன், ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர் .
Comments are closed.