திருச்சி குண்டூர், அய்யனார் நகர், மூன்றாவது கிராசை சேர்ந்தவர் சிராஜ். இவருக்கு ஷகிலா பானு என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். சிராஜ் வேலைக்கு சென்று வருகிறார். ஷகிலா பானு ஆடு வளர்த்து வருகிறார். இந்தநிலையில் காலை மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மாலை வரை வீடு திரும்பவில்லை. இந்தசூழலில் சிராஜ் தனது எதிர் வீட்டில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, இன்னோவா கிரிஸ்டா காரில் வந்த மர்ம நபர்கள் ஒரு கிடா மற்றும் இரண்டு ஆடுகளைப் பிடித்து காரில் கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து சிராஜ், நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால், காவலர்கள் அவர் புகாரை ஏற்க மறுத்து நாளை வாருங்கள் என திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை மர்ம கும்பல் காஸ்ட்லி காரில் வந்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.