Rock Fort Times
Online News

காங்கிரஸ் முன்னாள் ராணுவ அமைச்சர் மகன் பாஜகவில் ஐக்கியம்!

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோணி. இவரது மகன் அனில் அந்தோணி. சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையே  பிரதமர் நரேந்திர மோடி குறித்து பி.பி.சி. சார்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்துக்கு ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், வி.முரளீதரன் முன்னிலையில் அனில் அந்தோணி இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்