Rock Fort Times
Online News

கார்த்திகை தீபம், கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் நாளை (13.12.2024) அன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், (15-12-2024) அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், இன்று 12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கோட்டத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 850 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பிவருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க “மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம். தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம் தற்காலிக பேருந்துநிலையம் (திருவண்ணாமலை) மார்க்கம் திண்டிவனம் ரோடு – ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செஞ்சி. திண்டிவனம், புதுச்சேரி. கிளாம்பாக்கம் அடையாறு மாதவரம் செங்கம் ரோடு – அத்தியந்தல் மைதானம், பெங்களூர் – ஓசூர் கிருஷ்ணகிரி தருமபுரி, திருப்பத்தூர்., செங்கம் ரோடு – விட்டோடிகள் நிலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர் ரோடு – Anna Arch போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு. செய்யாறு, அவலூர்பேட்டை ரோடு – செல்வபுரம் சிவகுமார் மைதானம், சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், காஞ்சி, கடலாடி ரோடு – டான் பாஸ்கோ பள்ளி மைதானம், காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம், வேட்டவலம் ரோடு – சர்வேயர் நகர், வேட்டவலம், விழுப்பரம், திருக்கோயிலூர் ரோடு – மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம், திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, மணலூர்பேட்டை ரோடு SR STEEL COMPANY எதிரில் உள்ள மைதானம் மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை, மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும்,பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப)லிட்., நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்