இந்தியா முழுவதும் 94 அஞ்சல் ஆர்.எம். எஸ். அலுவலகத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள ஆர்எம்எஸ் அலுவலகம் மற்றும் தமிழகத்தில் 10 இடங்களிலும், திருச்சி கோட்டத்தில் கும்பகோணம், கரூர், திண்டிவனம், புதுக்கோட்டை ஆகிய
இடங்களில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் மூடப்பட்டதை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் இன்று(11-12-2024) முதல் 2 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணவிரத போராட்டத்திற்கு அகில இந்திய ஆர் எம் எஸ்.ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் நம்பி ஆனந்தன், எப். என்.பி. ஓ.கோட்ட செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சம்மேளன குழு உறுப்பினர் கோபால், மண்டலச் செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய துணைத் தலைவர் பழனிவேலு வரவேற்று பேசினார். அகில இந்திய துணை தலைவர் பழனி சுப்பிரமணியம் கண்டன உரை ஆற்றினார்.
முடிவில் கிளைச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 939
Comments are closed.