Rock Fort Times
Online News

மாமல்லபுரம் அருகே கார் மோதி 5 பெண்கள் பலி – காரில் இருந்தவர்களுக்கு சரமாரி அடி…

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு பகுதி ஈ.சி.ஆர். சாலையில் இன்று(27-11-2024) மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார், சாலையோரம் அமர்ந்து மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் இருந்த நபர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்