Rock Fort Times
Online News

திடீரென டயர் வெடித்ததால் கோர விபத்து : லாரி மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில் 2 டிரைவர்கள் உட்பட 3 பேர் பலி…!

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து ராசிபுரம் வழியாக நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் என்ற பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள மெட்டாலா கோரை ஆற்றுப் பகுதியில்  சென்றபோது பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிர்திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர், பேருந்து டிரைவர், பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர் என 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும்,10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவமனை சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். தனியார் பேருந்து – லாரி, நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்